இந்தோனேஷியாவில் உள்ள Anak Krakatau எரிமலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெடித்து வருவதால், நாட்டின் பல பகுதிகளில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையிலான Sunda Strait பகுதியில் அமைந்துள்ள இந்த எரிமலை வெடிப்பின்போது, சாம்பல் மேகம் சுமார் 50,000 அடி உயரம் வரை சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாம்பல் Jakarta மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கும் பரவியதால், பாதுகாப்பு காரணங்களுக்காக 8 விமான நிலையங்களில் சேவைகள் நிறுத்தப்பட்டன. Soekarno-Hatta International Airport உட்பட பல முக்கிய விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான domestic மற்றும் international flights ரத்து அல்லது தாமதம் செய்யப்பட்டன.

இந்த disruption காரணமாக 3.4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டதாக புதிய reports கூறுகின்றன. இன்று காற்றின் திசை மாறி சாம்பல் தாக்கம் குறைந்ததையடுத்து Jakarta மற்றும் அருகிலுள்ள சில விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் Anak Krakatau மீண்டும் சில முறை வெடித்ததால், அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எரிமலைக்கு அருகிலுள்ள 3 கி.மீ. பாதுகாப்பு வட்டத்திற்குள் செல்ல வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது உடனடி tsunami ஆபத்து இல்லை என இந்தோனேஷிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் volcanic ash காரணமாக மக்கள் mask அணியவும், தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.