மாஸ்கோ:

உக்ரைன்–ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்படும் தூதரக முயற்சிகள் வேகமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இன்று மியாமியில் உக்ரைன் அரசு செயலாளர் ருஸ்டெம் உமெரோவை சந்திக்க உள்ளனர்.

இதற்கிடையில், ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்க அதிகாரிகளுடன் சுமார் 5 மணி நேரம் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் புதின் கூறுகையில், உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க அரசுடன் நடைபெற்ற பேச்சுகள் பயனுள்ளதாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும்,
“போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான இந்த பேச்சுவார்த்தை மிகுந்த அத்தியாவசியமானது. ஆனால் அதே நேரத்தில், இது மிக கடினமான பணி,”
என்று புதின் குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன்–ரஷியா போருக்குத் தீர்வு காண அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி செய்து வருகிறார். இதற்காக அவர் முன்பு அலாஸ்காவில் புதினை நேரில் சந்தித்து பேசியிருந்தார். தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.