சென்னை:

எச்.சி.எல். இந்திய சுற்றுப்பயண சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் 4-வது சுற்று சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில், தமிழகத்தைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா தனது சக நாட்டவரான தன்வி கண்ணாவை 6-11, 12-10, 11-1, 5-11, 11-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் டெல்லியைச் சேர்ந்த அனாஹத் சிங் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஹெய்லி வார்டை 11-8, 11-6, 11-4 என்ற நேர்செட்டில் தோற்கடித்து இறுதிப்போட்டியில் இடம் பிடித்தார்.

இன்று நடக்கவுள்ள இறுதிசுற்றில், தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா, டெல்லியைச் சேர்ந்த அனாஹத் சிங்குடன் மோத உள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் பிரான்சைச் சேர்ந்த மாகோ லெவியை 13-11, 11-9, 5-11, 11-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் முன்னேறினார். இறுதி போட்டியில் அவர் ஆதம் ஹவாலை (எகிப்து) எதிர்கொள்ள உள்ளார்.