இண்டிகோ விமான சேவை ரத்து – தொலைதூர ரெயில்களில் கூடுதல் பெட்டிகள்

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பயணிகளின் வசதிக்காக தொலைதூர ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி,

  • திருச்சி – ஜோத்பூர் ஹம்சபார் எக்ஸ்பிரஸ் (20482): இன்று முதல் கூடுதலாக ஒரு ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது.

  • ஜோத்பூர் – திருச்சி ஹம்சபார் எக்ஸ்பிரஸ்: வரும் 10-ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது.

  • சென்னை சென்டிரல் – திருவனந்தபுரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12695): டிசம்பர் 6-ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது.

  • திருவனந்தபுரம் – சென்னை சென்டிரல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்: நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் கூடுதலாக ஒரு ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது.

  • சென்னை சென்டிரல் – மங்களூரு சென்டிரல் எக்ஸ்பிரஸ் (12601): இன்று முதல் கூடுதலாக ஒரு ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது.

  • சென்னை கடற்கரை – மும்பை C.S.T. சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22158): இன்று முதல் கூடுதலாக ஒரு ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது.

  • மும்பை C.S.T. – சென்னை கடற்கரை எக்ஸ்பிரஸ்: நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் கூடுதலாக ஒரு ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது.

இவ்வாறு தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.