Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
சென்னை: நடிகர் ரவி தேஜா கடைசியாக பானு போகவரபு இயக்கிய மாஸ் ஜதாரா படத்தில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தற்போது அவர் தனது முழு கவனத்தையும் இயக்குநர் கிஷோர் திருமலா இயக்கும் அடுத்த படமான பாரத மகாசாயுலகு விக்ஞாப்தி மீது செலுத்தி வருகிறார்.
இந்த படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் மற்றும் டிம்பிள் ஹயாதி நடித்துள்ளனர். சுதாகர் செருகுரி தயாரிக்கும் இந்த படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார். படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் வகையில் தயாராகி வருகிறது.
சமீபத்தில், இப்படத்தின் முதல் பாடலான பெல்லா பெல்லா வெளியானது. இதில் ரவி தேஜாவுடன் நடிகை ஆஷிகா நடனமாடி இருந்தார். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் புரோமோ வெளியாகியுள்ளது. இதில் ரவி தேஜாவுடன் டிம்பிள் ஹயாதி நடனமாடியுள்ளார். முழு பாடல் டிசம்பர் 10ஆம் தேதி மாலை 4.05 மணிக்கு வெளியாக உள்ளது.