மலேசியாவில் நடிகர் அஜித்துடன் செல்பி எடுத்த ரசிகை ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டும் அல்லாமல், திறமையான கார்பந்தய வீரராகவும் திகழும் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு ரேஸிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது ரேசிங் நிறுவனத்துடன் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விருதுகள் வென்றவர்.

இதன் தொடர்ச்சியாக, அஜித்குமார் மலேசியாவில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் பங்கேற்க அங்கு சென்றுள்ளார். அங்கு அவரை சந்தித்த ஒரு மலேசிய பெண் ரசிகை எடுத்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது.

அந்த வீடியோவில், அவர் உணர்ச்சியுடன் கூறியதாவது:

“முதல் முறையாக அஜித் சாரை பார்த்தவுடன் ஒரு செல்பி எடுக்க முயன்றேன். அப்போது அவர் எனக்கு சற்று கண்டித்தார். ஆனால் சில நொடிகளில் அவரே என்னை அழைத்து, என்னுடன் ஒரு செல்பி எடுத்துக் கொடுத்தார். என் வாழ்நாள் கனவு நனவான அந்த நிமிஷத்தில்… நான் உலகத்தையே மறந்துவிட்டேன்,” என ஆனந்தக் கண்ணீருடன் ரசிகை தெரிவித்திருக்கிறார்.