📰 மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
மதுரையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, சென்னை செல்லும் நோக்கில் நேற்று மதியம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டு அவரை வழியனுப்பினர்.
அந்த நேரத்தில், வாலிபர் ஒருவர் திடீரென திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக சர்ச்சைக்குரிய கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விசாரணையில், அந்த வாலிபர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மகன் அக்சய் மார்க்கண்டேயன் என தெரியவந்தது. பின்னர், போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.