🚨 கோவில்பட்டியில் பள்ளி வாகனம் – மினி பஸ் மோதிய விபத்து: 4 குழந்தைகள் காயம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளி நேற்று மாலை முடிந்தது. பின்னர், பள்ளி வாகனம் ஒன்று மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது.
கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே மாணவர்களை இறக்கிய பிறகு, அந்த வாகனம் சாலைக்கு வந்தபோது, கூசாலிபட்டியில் இருந்து பஸ் நிலையம் நோக்கி வந்த தனியார் மினி பஸ் பள்ளி வாகனத்தை மோதியது.
இதில் பள்ளி வாகனத்தின் கண்ணாடி உடைந்து, உள்ளே இருந்த 4 குழந்தைகள் லேசாக காயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த குழந்தைகளை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் குழந்தைகள் வீடு திரும்பினர்.
இந்த விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.