மாற்றத்தை விட முன்னேற்றம் தான் முக்கியம்: வாக்களித்த பிறகு இயக்குனர் அமீர் பேட்டி
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி இயக்குனர் Ameer தனது வாக்கை பதிவு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது, “மாற்றத்தை விட முன்னேற்றம் தான் முக்கியம்” என்று தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டு வந்துள்ளேன். தமிழ்நாட்டில் மாநில சுயாட்சியும், தமிழ்நாட்டு உரிமைகளையும் காக்கும் கட்சிகளுக்கே நான் எப்போதும் வாக்களிப்பேன்” என்றார்.
இளைஞர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்
மேலும், “இளைஞர்கள் வாக்களிப்பது மிகவும் முக்கியம். வாக்களிக்காமல் இருந்து பின்னர் அடிப்படை வசதிகள் இல்லை என்று குறை கூற எந்த உரிமையும் இல்லை. முதலில் வாக்களித்து விட்டு தான் கேட்க வேண்டும்” எனக் கூறினார்.
பிரபலத்திற்காக வாக்களிக்க வேண்டாம்
“ஒருவரைப் பிடிக்கும் என்பதற்காக மட்டும் வாக்களிக்கக் கூடாது. வரலாறு, வாழ்வாதாரம், அரசியல், மாநில உரிமைகள், வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாற்றம் அல்ல, முன்னேற்றம்
“எனக்கு மாற்றத்தை விட முன்னேற்றமே முக்கியம்” என்று அவர் பேட்டியை நிறைவு செய்தார்.