சென்னை:
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் வரலாற்றில் காணாத அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

காலை எண்ணி மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், ஆரம்பம் முதலே தமிழக வெற்றிக் கழகம் அசுர வேகத்தில் முன்னிலை பெற்றது. மதியம் பத்து மணி நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 105 தொகுதிகளில் முதலிடம் வகிக்கிறது. ஆளும் திமுக 52 இடங்களிலும், அதிமுக 76 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. எந்தக் கட்சிக்கும் 118 இடங்கள் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமையும் அபாயம் உள்ளது.

இந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி அரசியல் சதுரங்க வேட்டைகள் தொடங்கும் என விமர்சகர்கள் கணிக்கின்றனர். தமிழக வெற்றிக் கழகம் 100 இடங்களைக் கடந்தாலும், 118 எட்டுவது சவாலாகத் தெரிகிறது. இதில் பாஜக தமிழக வெற்றிக் கழகத்தை உடைக்க முயலும் எனக் கூறப்படுகிறது. பாஜகவின் ஐந்து வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். புதிய கட்சியாக இருப்பதால், அதன் உறுப்பினர்களின் அனுபவமின்மையைப் பயன்படுத்தி பிளவு ஏற்படுத்தி புதிய கூட்டணி உருவாக்கலாம் எனத் தகவல்கள்.

அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது. 76 இடங்களில் முன்னிலை வகிக்கும் அதிமுக, தமிழக வெற்றிக் கழகப் பிளவு ஏற்பட்டால் அதிருப்தி உறுப்பினர்களை இழுக்கலாம். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தாலும், உட்கட்சி பூசல்கள் காரணமாக அது கவிழ்ந்து அதிமுக மீண்டும் ஆளலாம் என நோக்கர்கள் கூறுகின்றனர்.

மற்றொரு வாய்ப்பாக, அதிமுகவிலிருந்து அதிருப்தி தலைவர்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப்பது. செங்கோட்டையன் போன்ற மூத்தவர்களின் தலைமையில் இது நடக்கலாம். தமிழக வெற்றிக் கழகத்திற்கு இன்னும் 13 இடங்கள் மட்டுமே தேவை. கொங்கு மண்டலம், தென் மாவட்டங்களில் அதிமுக முகங்களை இழுக்கலாம்.

ஆனால், கட்சித் தாவல் தடைச் சட்டம் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. அதிமுகவின் 76 உறுப்பினர்களில் மூன்றில் ரெண்டு பங்கு மட்டுமே பிரிந்தால் தகுதி தப்பும். அத்தகைய பெரிய பிரிவு சாத்தியமில்லை.

திமுக 52 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று அதிர்ச்சியில் உள்ளது. தமிழக வெற்றிக் கழக ‘விஜய் ஃபேக்டர்’ அவர்களின் வாக்குகளை சரித்தது. மொத்தத்தில், விஜய் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளார். டெல்லி, எடப்பாடி தரப்பு நகர்வுகள் போர்க்களத்தை உருவாக்கும். மாலை இறுதி முடிவுகள் தெரியும்.