பெண்களின் கண்ணீரும் கதறலும் கேட்காமல் போனது ஏன்? ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
சென்னை:
தமிழகப் பெண்களின் கண்ணீரும் கதறலும் முதல்வர் **M. K. Stalin**க்கு கேட்காமல் போனது ஏன்? என்று Edappadi K. Palaniswami (இபிஎஸ்) கேள்வி எழுப்பியுள்ளார்.
AIADMK பொதுச்செயலாளரான அவர் வெளியிட்ட அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15 வயது சிறுமி மீது நடைபெற்றதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், “சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம் குறித்து கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து பேசி வருகிறேன். மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாக இருந்திருந்தால், பெண்களை இந்த அரசு பாதுகாத்திருக்கும்” என குறிப்பிட்டார்.
ஸ்டாலின் தன்னை “அப்பா” என்று அழைக்க விரும்புகிறார். அவரும் ஒரு மகளை பெற்ற தந்தை தான். இருந்தும் தமிழகப் பெண்களின் கண்ணீரும் கதறலும் அவருக்கு கேட்காமல் போனது ஏன்? என இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
மேலும், “உங்கள் பிள்ளைகளை, குறிப்பாக பெண் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டுமெனில், வரும் ஏப்ரல் 23 அன்று அதிமுக சின்னத்தில் வாக்களியுங்கள். உங்கள் வாக்கே உங்கள் பிள்ளைகளை காப்பாற்றும் ஆயுதம்” என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இறுதியாக, “தமிழக மக்களை, பெண்களை காப்பது தான் எனது முதல் பணி. போதைப்பொருள் புழக்கத்தை மூன்றே மாதங்களில் ஒழித்துக் கட்டுவேன்” என்று உறுதியளித்தார்.