தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாவட்டத்தின் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் பல சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்த வெற்றி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் கணக்கிடப்பட்டு, தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்று வாரியாக எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளும் பல இடங்களில் கடும் போட்டி வழங்கி வருகின்றன.

மேலூர் தொகுதியில் காங்கிரஸ் பெற்றுள்ள இந்த வெற்றி, கூட்டணி அரசியல் கணக்கீட்டில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

எனினும், மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இறுதி முடிவுகள் வெளியாகும் வரை பரபரப்பு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.