வாக்களித்த பிறகு அதிரடி பதில் – விஜய் பற்றி பேச மறுத்த சரத்குமார்

சென்னை:
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார், மகன் ராகுல் சரத் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், மக்கள் எங்கிருந்தாலும் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்றும், 100 சதவீத வாக்குப்பதிவு அவசியம் என்றும் தெரிவித்தார்.

மேலும் தனது மகன் முதல் முறையாக வாக்களித்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

அதே நேரத்தில், நடிகர் விஜயின் அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நான் இங்கு ஓட்டு போட தான் வந்திருக்கிறேன்… யாரைப் பற்றியும் பேச வரவில்லை” என்று அதிரடியாக பதிலளித்தார்.