தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்று வாரியாக கணக்கிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், காரைக்குடி சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சி (நாதக) வேட்பாளர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார். ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் டாக்டர் டி.கே. பிரபு 3,667 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இந்த முன்னிலை காரைக்குடி தொகுதியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமான் போட்டியிடும் தொகுதி என்பதால், இந்த தொகுதியின் முடிவுகள் மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழகத்தில் இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே கடும் நான்கு முனைப்போட்டி நிலவிய நிலையில், பல தொகுதிகளில் ஆரம்ப நிலவரங்கள் எதிர்பாராத மாற்றங்களை காட்டி வருகின்றன.

அடுத்தடுத்த சுற்றுகளில் நிலைமைகள் எப்படி மாறும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் தீவிரமாக கவனித்து வருகின்றன.