சென்னை: தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) நடைபெற்று வருகிறது. இதற்கான தகுதி தேதி 01.01.2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக (Special Roll Observers) இந்திய தேர்தல் ஆணையம் பின்வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்துள்ளது.
நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்டங்கள்:
ராமன் குமார், ஐ.ஏ.எஸ். – இணை செயலாளர், கூட்டுறவு அமைச்சகம், புதுடெல்லி ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள்: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி
குல்தீப் நாராயண், ஐ.ஏ.எஸ். – இணை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், புதுடெல்லி ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள்: சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி
நீரஜ் கர்வால், ஐ.ஏ.எஸ். – மேலாண்மை இயக்குநர், இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம், புதுடெல்லி ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள்: திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்
விஜய் நெஹ்ரா, ஐ.ஏ.எஸ். – இணை செயலாளர், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், புதுடெல்லி ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள்: புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி
இந்த சிறப்பு பார்வையாளர்கள், மாநிலம் முழுவதும் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் அனைத்து கட்டங்களையும் — கணக்கீட்டு கட்டம், உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம், அறிவிப்பு கட்டம், இறுதி பட்டியல் வெளியீடு வரை — முழுமையாகக் கண்காணிப்பர். மேலும், இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்கள் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதுடன், தகுதி வாய்ந்த எவரும் பட்டியலில் விடுபடக் கூடாது; தகுதியற்ற எவரும் சேர்க்கப்படக் கூடாது என்ற அடிப்படை கொள்கை பின்பற்றப்படுவதை உறுதி செய்வர்.