
சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 3 ATM கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மூன்று சம்பவங்களிலும் ATM மையங்களில் பாதுகாப்பு காவலர் இல்லாததும், CCTV மற்றும் alarm systems செயலிழக்கச் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதல் சம்பவம் ஆகஸ்ட் 25 அன்று சோமங்கலம் அருகே ICICI Bank ATM-ல் நடந்தது. Gas cutter பயன்படுத்தி ATM cash compartment-ஐ வெட்டி, சுமார் ₹9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு கும்மிடிப்பூண்டி Axis Bank ATM குறிவைக்கப்பட்டது. CCTV camera மீது paint spray செய்து, ATM-ஐ வெட்டி சுமார் ₹11 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரே interstate gang தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
அடுத்து செப்டம்பர் 5 அன்று திருவள்ளூர் மாவட்டம் கூடப்பாக்கம்–மேட்டுக்கண்டிகை பகுதியில் உள்ள ATM-ஐ கும்பல் முழுவதுமாக தூக்கிச் சென்றது. ATM-ல் சுமார் ₹12 லட்சம் வரை இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கொள்ளைக்கு ஒரு திருடப்பட்ட அமரர் ஊர்தி (hearse) பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழு பேர் கொண்ட கும்பலில் இவர்கள் இடம்பெற்றதாகவும், மேலும் நான்கு பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கட்டுமானத் தொழிலாளி ஒருவர் ATM குறித்த தகவலை கும்பலுக்கு வழங்கியிருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ச்சியான கொள்ளைகளுக்குப் பிறகு ATM பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. ஒவ்வொரு ATM-க்கும் guard நியமிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும், பாதுகாப்பு இல்லாத kiosks-ஐ இரவில் மூடுவது மற்றும் alarm alerts-ஐ நேரடியாக போலீசாருடன் இணைப்பது போன்ற நடவடிக்கைகள் தேவை என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.