
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள் இதில் அடங்கும்.
பெரம்பலூர் பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. அல்லிநகரம், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, கூடலூர், கீழப்பலூர், கொக்குடி, மேலமாத்தூர், நல்லரிக்கை, குளத்தூர், சிலக்குடி, திம்மூர் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை மற்றும் ஆலடிக்குமுலை பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை திட்டமிடப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை power shutdown அமலில் இருக்கும். கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி Check Post, தும்பளப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும்.
பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாக முடிந்தால், மின் விநியோகம் முன்கூட்டியே மீண்டும் வழங்கப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.