
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் 13 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் Social Media பயன்படுத்துவதைத் தடை செய்யும் திட்டத்தை European Commission President Ursula von der Leyen முன்மொழிந்துள்ளார். இது இன்னும் சட்டமாக அமலுக்கு வரவில்லை; EU உறுப்புநாடுகள் மற்றும் lawmakers ஒப்புதல் அளித்த பிறகே நடைமுறைக்கு வர முடியும்.
புதிய திட்டத்தின்படி, 13 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு social media access முழுமையாகத் தடுக்கப்படும். 13 முதல் 15 வயதுள்ளவர்கள் பெற்றோர் அல்லது guardian கண்காணிப்புடன் limited அல்லது “mini account” வகை access மட்டுமே பெறும் வகையில் விதிகள் பரிசீலிக்கப்படுகின்றன. 15 வயதுக்கு மேற்பட்ட இளம் பயனர்களுக்கும் கூடுதல் online safety protections கொண்டு வரப்படலாம்.
இந்த திட்டம் social media மட்டும் அல்லாமல் video-sharing platforms, சில online games மற்றும் AI companion services போன்ற குழந்தைகள் அதிகம் பயன்படுத்தும் digital services-க்கும் விரிவுபடுத்தப்படலாம். குழந்தைகளை addictive design, harmful content மற்றும் அதிகப்படியான screen engagement-இலிருந்து பாதுகாப்பதே நோக்கம் என EU தரப்பு கூறுகிறது.
மேலும், platforms “safe by design” என்ற அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என von der Leyen வலியுறுத்தியுள்ளார். Infinite scrolling, autoplay, aggressive notifications போன்ற features குழந்தைகளின் பயன்பாட்டை அதிகரிக்கக்கூடும் என்பதும் EU-வில் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த திட்டத்திற்கு privacy, age verification மற்றும் குழந்தைகளின் online access உரிமை தொடர்பாக எதிர்ப்புகளும் எழுகின்றன. பயனரின் வயதை எப்படி சரிபார்ப்பது, ID அல்லது biometric verification தேவைப்படுமா என்பது போன்ற அம்சங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.