நாகை, வேளாங்கண்ணிக்கு கோயம்பேட்டிலிருந்து சிறப்புப் பேருந்துகள் – வார இறுதியில் மொத்தம் 2,310 சேவைகள்

சென்னை — வார இறுதி மற்றும் முகூர்த்த நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நவம்பர் 27 முதல் 29 வரை மொத்தம் 2,310 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளன.

நவம்பர் 28 சனிக்கிழமை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு மொத்தம் 60 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு 540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதவரத்திலிருந்து புதுச்சேரி, வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நவம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை, சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளுக்காக, பயணிகள் தேவைக்கேற்ப 740 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

— அரசுபார்வை செய்திகள்