நாகை கீழ்வேளூர் அருகே இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் – 20-க்கும் மேற்பட்டோர் காயம்
நாகப்பட்டினம் — கீழ்வேளூர் அருகே கானூரில் அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் நவம்பர் 27 அன்று நேருக்கு நேர் மோதியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வேளாங்கண்ணியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், திருவாரூரிலிருந்து தேவூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் கானூர் பகுதியில் மோதிக்கொண்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து தொடர்பாக கீழ்வேளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
— அரசுபார்வை செய்திகள்