
பீகாரில் தொடர்ந்து உயர்ந்து வரும் நதிநீரால் பல மாவட்டங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது. கங்கை, கண்டக், கோசி, புர்ஹி கண்டக், புன்புன் மற்றும் காக்ரா உள்ளிட்ட நதிகள் பல கண்காணிப்பு மையங்களில் அபாய அளவைத் தாண்டி ஓடுகின்றன.
பாட்ட்னா, போஜ்பூர், வைஷாலி, பாகல்பூர், முங்கேர், சரண் உள்ளிட்ட மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சமீபத்திய மாநில பேரிடர் மேலாண்மைத் தரவுகளின்படி, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாட்ட்னா மாவட்டத்தில் மட்டும் சுமார் 2.32 லட்சம் பேர், போஜ்பூரில் சுமார் 2.84 லட்சம் பேர், வைஷாலியில் சுமார் 85,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் நீரில் மூழ்கியதால் படகுகளே முக்கிய போக்குவரத்து வழியாக மாறியுள்ளன.
நிலைமையை சமாளிக்க 27 SDRF குழுக்கள் மற்றும் 6 NDRF குழுக்கள் உட்பட மொத்தம் 33 மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 700 அரசு படகுகள் மீட்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் community kitchens, relief camps மற்றும் உணவு பொருட்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது. பீகார் முதல்வர் சம்ராட் சவுத்ரி வெள்ளப் பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்து, தடுப்பணைகள் மற்றும் ஆற்றங்கரைப் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கங்கை பாட்ட்னாவின் Digha, Gandhi Ghat, Hathidah பகுதிகளிலும், Buxar, Munger, Bhagalpur மற்றும் Kahalgaon பகுதிகளிலும் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.