எஸ்டோனியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் Hanno Pevkur, உக்ரைனுக்கு artillery ammunition வாங்கிய ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2024-ல் உக்ரைனுக்காக artillery shells வாங்க EU European Peace Facility நிதியில் இருந்து சுமார் €70 million முன்பணம் செலுத்தப்பட்டதாக reports தெரிவிக்கின்றன. ஆனால் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு artillery shells தயாரித்த அல்லது விற்ற முன் அனுபவம் இல்லை என்ற தகவல் பின்னர் வெளியானது.

இந்த ஒப்பந்தத்தில் Italian-registered Datasel S.R.L. நிறுவனம் தொடர்புபட்டிருந்தது. அந்த நிறுவனம் இந்தியாவின் Neco Defence Munitions உடன் தொடர்புடையதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆயுதங்கள் தாமதமாக வந்ததுடன், வந்த சில ammunition பயன்படுத்த முடியாத தரத்தில் இருந்ததாகவும் reports கூறுகின்றன.

Estonia National Audit Office இந்த defence procurement நடவடிக்கைகளில் கடுமையான குறைபாடுகளை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அரசியல் அழுத்தம் அதிகரித்தது. இதே விவகாரம் தொடர்பாக criminal investigation-மும் தொடங்கப்பட்டுள்ளது.

Hanno Pevkur, தனிப்பட்ட முறையில் ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என்றாலும், பாதுகாப்புத்துறையின் தலைவராக அரசியல் பொறுப்பை ஏற்று பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

2022 முதல் Estonia Defence Minister ஆக இருந்த Pevkur, Russia–Ukraine போரின் பின்னணியில் NATO மற்றும் Ukraine support விவகாரங்களில் முக்கியமான குரலாக இருந்து வந்தவர்.