இன்றைய ராசிபலன் – 31.12.2025 (புதன்)

இன்று புதன் கிழமை. தமிழ் வருடம் விசுவாவசு, தமிழ் மாதம் மார்கழி, நாள் 16. ஆங்கில தேதி 31 டிசம்பர் 2025.
இன்று அதிகாலை 01.03 வரை பரணி நட்சத்திரமும், இரவு 11.26 வரை கிருத்திகையும், அதன் பின் ரோகினி நட்சத்திரமும் நடை பெறுகிறது.
திதி: அதிகாலை 1.34 வரை ஏகாதசி, இரவு 11.16 வரை துவாதசி, அதன் பின் திரயோதசி.
இன்று அமிர்த யோகம், சித்த யோகம் இருப்பதால் சுப காரியங்களுக்கு உகந்த நாள்.

நல்ல நேரம்: காலை 9.15–10.15 | மாலை 4.45–5.45
ராகு காலம்: 12.00–1.30
எமகண்டம்: 7.30–9.00
குளிகை: 10.30–12.00
கௌரி நல்ல நேரம்: காலை 2.00–3.00 | மாலை 6.30–7.30
சூலம்: வடக்கு | சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி

மேஷம்

வெளிநாட்டு பயணம், திடீர் செலவுகள், புதிய வாகன யோகம் உண்டு. மாணவர்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்

வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். காதலில் சிறு குழப்பங்கள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மிதுனம்

தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்ப முடிவுகள் சுமூகமாக முடியும். சுப காரியம் கைகூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கடகம்

வெளியூர் பயணம் வெற்றி தரும். வேலை வாய்ப்பில் உயர்வு, சம்பள அதிகரிப்பு சாத்தியம். உடல்நலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

சிம்மம்

வழக்குகளில் சாதக தீர்வு கிடைக்கும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை வலுப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி

வியாபாரம் லாபகரமாகும். வெளிநாட்டு தொடர்புகள் நன்மை தரும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

துலாம்

இன்று சந்திராஷ்டமம். வாக்குவாதம் தவிர்க்கவும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

பணி சார்ந்த பாராட்டுகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான நன்மை உண்டு. வாகனத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு

தம்பதிகளிடையே மனஸ்தாபம் வரலாம். பொறுமை அவசியம். சமூக மரியாதை உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

மகரம்

சுயதொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல்நலத்தில் சிறு கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கும்பம்

எதிர்பாராத நற்செய்தி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். புதிய நட்பு உருவாகும்.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

மீனம்

திருமண பேச்சுகள் சாதகமாகும். செலவுகளில் கட்டுப்பாடு அவசியம். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்