அதிமுக-பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்வதே விஜய்யின் நோக்கம்: திருமாவளவன் குற்றச்சாட்டு
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதற்கு மக்கள் அளித்த வாக்குகள் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், கூட்டணி கட்சிகளின் பங்களிப்பும் அதற்கு சமமாக உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று வி.சி.க. தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்திருப்பதற்கு திமுகவும், கூட்டணி கட்சிகளும் முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் 8 தொகுதிகளில் போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். அதேபோல், திமுக மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களையும் நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார்.