வாக்காளர் அட்டை இல்லையா? 12 ஆவணங்கள் போதும்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம். தேர்தல் ஆணையம் இதற்கான விரிவான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் வாக்காளர் அட்டை

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ECINET இணையதளத்தில் சென்று, வாக்காளர் அட்டை எண்ணைப் பதிவு செய்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணைப் பயன்படுத்தியோ ஓ.டி.பி. மூலம் புதிய டிஜிட்டல் வாக்காளர் அட்டையைப் பதிவிறக்கம் செய்யலாம்.

12 மாற்று அடையாள ஆவணங்கள்

  1. ஆதார் அட்டை

  2. புகைப்படத்துடன் கூடிய வங்கி/தபால் கணக்குப் புத்தகங்கள்

  3. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு அட்டை

  4. தொழிலாளர் காப்பீட்டு அட்டை/ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அட்டை

  5. ஓட்டுநர் உரிமம்

  6. பான் கார்டு

  7. தேசிய மக்கள் தொகைப் பதிவேடு அட்டை

  8. பாஸ்போர்ட்

  9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

  10. அரசு/பொதுத்துறை ஊழியர் அடையாள அட்டை

  11. நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர் அட்டை

  12. ஊனமுற்றோர் தனித்துவ அடையாள அட்டை

முக்கிய அறிவுறுத்தல்

பூத் சிலிப் வாக்குச் சாவடிக்கு செல்லத்தக்கதல்ல. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் எந்த ஆவணமும் போதாது. வாக்குச் சாவடி, பாகம் எண், வரிசை எண்ணை electorssearch.eci.gov.in, ECINET ஆப் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

தேர்தல் வழிகாட்டி

வாக்குப்பதிவு நாளை ஏப்ரல் 23 அன்று காலை 7 முதல் மாலை 6 வரை. அடையாள ஆவணம் கட்டாயம். செல்போன் தடை, டோக்கன் வசதி உள்ளது. 5.73 கோடி வாக்காளர்கள் 75 ஆயிரம் சாவடிகளில் பங்கேற்கின்றனர்.