காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுயசரிதை நூல் “Belonging: A Journey of Love”, வரும் நவம்பர் 10, 2026 அன்று இந்தியாவில் வெளியாக உள்ளது.

இந்த நூலை HarperCollins India வெளியிட உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 544 பக்கங்கள் கொண்டதாக கூறப்படும் இந்த memoir-ல், சோனியா காந்தியின் இத்தாலியிலான ஆரம்பகால வாழ்க்கை, இளம் வயதில் ராஜீவ் காந்தியை சந்தித்தது, அவரை திருமணம் செய்து இந்தியா வந்தது, இந்திரா காந்தி குடும்பத்தில் இணைந்தது உள்ளிட்ட தனிப்பட்ட அனுபவங்கள் இடம்பெறுகின்றன.

மேலும் இந்திரா காந்தி படுகொலை, ராஜீவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்ற காலம், ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு சோனியா காந்தி அரசியலுக்கு வந்தது போன்ற அவரது வாழ்க்கையின் முக்கிய அரசியல் நிகழ்வுகளும் புத்தகத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த நூலை Penguin Random House India வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் manuscript-ல் சில பகுதிகளை edit அல்லது remove செய்வது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த வெளியீட்டு ஏற்பாடு முடிவுக்கு வந்தது. பின்னர் இந்திய வெளியீட்டு உரிமையை HarperCollins India எடுத்துள்ளது.

இந்த நூல் சோனியா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்லாமல், இந்திய அரசியல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல முக்கிய காலகட்டங்களை அவர் நேரடியாக கண்ட அனுபவங்களின் வழியாக பதிவு செய்யும் memoir ஆக இருப்பதால் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.