மதுரை:
திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்டிருந்த 144 தடைக்கால உத்தரவை ரத்து செய்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
தீபத்தை இன்று ஏற்றிவிட்டதற்கான நிறைவேற்றல் அறிக்கையை நாளையே தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த உத்தரவை நிறைவேற்ற தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.