சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று இணைந்த மூத்த அரசியல்வாதியும் சிறந்த பேச்சாளருமான நாஞ்சில் சம்பத்திற்கு, கழகத்தின் பரப்புரைச் செயலாளர் (Campaign Secretary) பொறுப்பை வழங்கி தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
விஜய் வெளியிட்ட அறிக்கையில், “அண்ணன் திரு. நாஞ்சில் சம்பத் அவர்கள், மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இணைந்துள்ளார். அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர் இனிமையான நடத்தை கொண்டவர், அனைவரிடமும் நல்லுறவு பேணுபவர். இப்போது அவர் கழகத்தின் பரப்புரைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
இவர், பொதுச் செயலாளர் திரு. என். ஆனந்த் அவர்களுடன் இணைந்து தன்னுடைய பணிகளை மேற்கொள்வார். கழக நிர்வாகிகளும் தோழர்களும் முழு ஒத்துழைப்பு அளித்து, மக்கள் பணியில் ஈடுபட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.