தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் மொபைல் போன் கட்டுப்பாடு இன்று, செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும் வசதி இல்லாத சாதாரண கைப்பேசிகளுக்கு இந்தத் தடை பொருந்தாது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

கோயில்களுக்குள் இறைவன் திருவுருவங்களை புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது, selfie மற்றும் reels எடுப்பது உள்ளிட்ட செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, camera வசதி கொண்ட smartphones மற்றும் mobile phones கோயிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் அவற்றை தங்களது வாகனங்கள் அல்லது தங்கும் அறைகளில் வைத்துவிட்டு வரலாம். இல்லையெனில் கோயில்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள locker வசதியை பயன்படுத்தலாம்.

கோயில் நிர்வாகங்கள் கைப்பேசிகளை பாதுகாப்பாக வைக்க ₹5 கட்டணத்தில் locker வசதி ஏற்படுத்தியுள்ளன. அவசர தேவைகளுக்காக கோயில் அலுவலர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் மூலம் தேவையான உதவிகளும் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பழனி, திருச்செந்தூர், மதுரை மற்றும் ராமேஸ்வரம் உள்ளிட்ட சில முக்கிய கோயில்களில் ஏற்கெனவே மொபைல் போன் கட்டுப்பாடு நடைமுறையில் இருந்த நிலையில், தற்போது மொத்தம் 52 முதுநிலை கோயில்களுக்கு இந்த நடைமுறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.