பிரசார நேரம் மீறல் புகார்: சீமான் மீது வழக்குப்பதிவு

காரைக்குடி:
தேர்தல் பிரசார நேரத்தை மீறி பரப்புரை மேற்கொண்டதாக, Seeman மீது காரைக்குடியில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காரைக்குடியில் நடைபெற்ற இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான், தனது தேர்தல் பிரசாரத்தை நேற்று மாலை நிறைவு செய்தார். தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், அவர் 6.05 மணி வரை தொடர்ந்து பரப்புரை செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.