
சென்னை மாநகரப் பேருந்து பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், 11 பரபரப்பான இடங்களில் குளிரூட்டப்பட்ட நவீன பேருந்து நிறுத்தங்கள் அமைக்க Greater Chennai Corporation திட்டமிட்டுள்ளது.
இந்த pilot project-க்காக 7 தனியார் நிறுவனங்களுடன் CSR நிதி அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனங்களே shelters-ஐ அமைத்து, பராமரித்து, பாதுகாப்புப் பணியாளர்களையும் நியமிக்க உள்ளன.
புதிய bus shelters-ல் Air Conditioning, CCTV cameras, free Wi-Fi, USB/mobile charging points, bus route information display, panic buttons, lighting, drinking water மற்றும் wheelchair-friendly ramps உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற உள்ளன. பாதுகாப்புக்காக toughened அல்லது laminated glass பயன்படுத்தப்படும்.
திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களில் Anna Salai DMS, Mylapore Bus Stand, Vadapalani Jawaharlal Nehru Road, Velachery Vijay Nagar Bus Terminus, SIMS Hospital அருகே இரு நிறுத்தங்கள், Little Mount, Guindy, Arcot Road Avichi School, Alandur Metro மற்றும் Egmore வடக்கு–தெற்கு பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் bus stops முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. pilot திட்டத்தின் செயல்பாடு வெற்றிகரமாக இருந்தால், சென்னை முழுவதும் இதுபோன்ற modern shelters எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.
சென்னையில் மொத்தம் 1,562 bus shelters-ஐ location மற்றும் feasibility அடிப்படையில் modernise செய்ய GCC திட்டமிட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.