நேற்று உயர்ந்த தங்கம் இன்று குறைந்தது – சென்னையில் சவரன் ₹93,760

சென்னை — சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நவம்பர் 28 காலை சவரனுக்கு ₹400 குறைந்தது. காலை சந்தை நிலவரப்படி, ஒரு சவரன் ₹93,760-க்கும், ஒரு கிராம் ₹11,720-க்கும் விற்பனையானது.

நேற்று மாலை ஒரு கிராம் ₹11,770-க்கும், ஒரு சவரன் ₹94,160-க்கும் விற்பனையானது. அதனுடன் ஒப்பிடும்போது, இன்று காலை கிராமுக்கு ₹50 குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ₹1,840 உயர்ந்த நிலையில், இன்று காலை அந்த உயர்வில் ₹400 குறைந்துள்ளது. நவம்பர் 26 அன்று பதிவான ₹92,320 என்ற விலையுடன் ஒப்பிடும்போது, இன்றைய காலை விலை சவரனுக்கு ₹1,440 அதிகமாக உள்ளது.

— அரசுபார்வை செய்திகள்