சென்னை கடற்கரை–செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம் – நவம்பர் 28, 30 அட்டவணை

செங்கல்பட்டு — செங்கல்பட்டு ரயில் நிலையப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நவம்பர் 28 மற்றும் 30 ஆகிய இரு நாட்களிலும் சென்னை கடற்கரை–செங்கல்பட்டு வழித்தடத்தில் சில மின்சார ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. இரு நாட்களிலும் காலை 11:40 முதல் பிற்பகல் 3:10 வரை தண்டவாளம் மற்றும் மின்விநியோகப் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நவம்பர் 28 அன்று 6 சேவைகள் பகுதியாக ரத்து

சென்னை கடற்கரையிலிருந்து காலை 10:13, 10:48 மற்றும் பிற்பகல் 12:30 மணிக்குப் புறப்படும் ரயில்கள் (40527, 40529, 40535) சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும். செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 12:30, 1:05 மற்றும் 3:00 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில்கள் (40536, 40538, 40544), சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்படும்.

நவம்பர் 30 அன்று 2 சேவைகள் முழுமையாக ரத்து

திங்கள்கிழமை 12 மின்சார ரயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. அவற்றில் 10 சேவைகள் சிங்கப்பெருமாள் கோவில்–செங்கல்பட்டு இடையிலும், 2 சேவைகள் காட்டாங்குளத்தூர்–செங்கல்பட்டு இடையிலும் ரத்து செய்யப்படுகின்றன. திருமால்பூரிலிருந்து காலை 11:05 மணிக்குப் புறப்படும் சென்னை கடற்கரை ரயில் (40804), சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 1:00 மணிக்குப் புறப்படும் அரக்கோணம் ரயில் (40901) ஆகிய இரு சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

— அரசுபார்வை செய்திகள்