கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷுக்கு டிசம்பர் 11 வரை நீதிமன்றக் காவல்

கள்ளக்குறிச்சி — பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அளித்த பாலியல் தொல்லைப் புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை டிசம்பர் 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கள்ளக்குறிச்சி குற்றவியல் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நவம்பர் 27ஆம் தேதி மாலை கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டில், விசாரணை அதிகாரியும் திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருமான சிருஷ்டி சிங் தலைமையிலான குழு அவரைக் கைது செய்தது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, நள்ளிரவில் அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல்துறை விசாரணையைக் கண்காணிக்கும் பொறுப்பு ஐ.ஜி. காமினியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

— அரசுபார்வை செய்திகள்