சென்னை மெட்ரோ ரயிலில் வைக்கப்பட்டிருந்த ஒரு Fixed Deposit விளம்பரம் தற்போது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

THECOS எனப்படும் Thiruvalluvar Transport Corporation Employee’s Co-operative Credit Society சார்பில் வைக்கப்பட்டிருந்த அந்த விளம்பரத்தில், “Girlfriend may give 0% interest, but our FD gives 14.40%” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்தை தனது X பக்கத்தில் பகிர்ந்த DMK MP தமிழச்சி தங்கபாண்டியன், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், அவர்களை ஒரு பொருளாக சித்தரிக்கும் வகையிலும் இந்த வாசகம் இருப்பதாக விமர்சித்தார்.

பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்தும் சென்னை மெட்ரோ போன்ற பொது இடங்களில் பெண்களின் கண்ணியம் மற்றும் மரியாதையை பாதிக்கும் வகையிலான விளம்பரங்கள் இடம் பெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இப்படிப்பட்ட விளம்பரத்திற்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் எப்படி அனுமதி வழங்கியது என்றும் கேள்வி எழுப்பிய தமிழச்சி தங்கபாண்டியன், அந்த விளம்பரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற விளம்பரங்கள் வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு முன்பே CITU தரப்பிலும் இதே விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. “பெண் நண்பரால் ஆதாயம் இல்லை” என்ற வகையிலான வார்த்தைகள் பெண்களை இழிவுபடுத்தும் அணுகுமுறையாக இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரம் தற்போது social media-விலும் பேசுபொருளாகியுள்ளது.