தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் G20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பல புதிய முன்னெடுப்புகளை முன்மொழிந்தார். குறிப்பாக, போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதத்திற்கிடையேயான தொடர்பை தடுக்கும் நடவடிக்கைகள், உலக சுகாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்தல், ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களை அவர் முன்வைத்தார்.

மேலும், அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியே எதிர்கால உலகின் முக்கிய செயல் திட்டமாக வேண்டும் என அவர் வலியுறுத்தினார். உலகளாவிய முன்னேற்றத்தில் ஆப்பிரிக்க நாடுகள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய மோடி, இந்தியா எப்போதும் ஆப்பிரிக்காவுடன் ஒற்றுமையாக நின்று ஆதரிக்கும் என உறுதியளித்தார்.