சென்னையில் தங்கம் விலை இன்று மாலையில் திடீர் உயர்வை கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் என மாறி வந்த தங்கம் விலை, இன்று காலை மாற்றமின்றி இருந்த நிலையில் மாலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி வரை சரிவில் இருந்தது. பின்னர் 25-ஆம் தேதி முதல் மீண்டும் ஏற்றம் கண்டது. அதன் பின்னர் சில நாட்கள் மீண்டும் குறைந்த நிலையில், இன்று காலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது.

இன்று காலை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,11,200 ஆகவும், ஒரு கிராம் ரூ.13,900 ஆகவும் இருந்தது. ஆனால் மாலை நேரத்தில் திடீரென சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,12,800 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையும் இன்று மாலை உயர்ந்துள்ளது. காலை மாற்றமின்றி இருந்த வெள்ளி விலை, மாலையில் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.270 ஆகியுள்ளது. கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2,70,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலர் மதிப்பு மாற்றம், உலக பொருளாதார பதற்றம் மற்றும் முதலீட்டாளர்களின் தேவைகள் போன்ற காரணங்களால் தங்கம் விலை மாற்றம் ஏற்படுகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

திருமண சீசன் மற்றும் விழாக்காலம் நெருங்கும் நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்திருப்பது நகை வியாபாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சில நாட்களில் விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளதாக சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.