பழனி, டிச. 3 —
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை நாளன்று தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை, விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியதாவது:
“திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை அன்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றுகொள்ள கோவில் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை வரவேற்கிறோம்.

1920 முதல் தீபத்தூணில் தீபம் ஏற்ற ஹிந்து சகோதரர்களுக்கும், இந்த வழக்கில் போராடிய வழக்கறிஞர் குழுவிற்கும் நன்றி தெரிவிக்கிறோம். 100 ஆண்டுகளுக்கு மேலாக ஹிந்துக்கள் தொடர்ந்து மலை உச்சியில் தீபம் ஏற்றி வருகின்றனர் என்பது மிகப் பெரிய சாதனை.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பில் பாராட்டுகளை தெரிவிக்கிறோம். இந்த வெற்றிக்கு காரணம் வீரத்துறவி ராமகோபாலனின் தவசக்தியே. அவர் இதற்காக நீண்ட காலமாக போராடி வந்தார். இந்த ஆண்டு அந்தப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.
இந்த வேலையில் அவர் செய்த பங்களிப்பை உணர்ந்து, அவரை வணங்குகிறோம். அவரை நினைவுகூர்கிறோம்,” என ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.