
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முக்கிய முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் இன்று புதிதாய் பிறந்ததைப் போல் உணர்கிறேன். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததற்கான எனது நோக்கம் நிறைவேறியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற என் சபதம் இன்று நிறைவேறியுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “தவெக தொண்டனாக, தலைவர் விஜய்யின் வழிகாட்டுதலில் என் கடமையை செய்துள்ளேன். அந்த கடமையை நிறைவேற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்றும் கூறினார்.
தற்போதைய நிலவரப்படி தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பது கட்சியினரிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
எனினும், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால் இறுதி முடிவுகள் வெளியாகும் வரை அரசியல் பரபரப்பு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.