பொதுவாக, அடுத்த மாதத்திற்கான கச்சா எண்ணெய் டெலிவரிக்கான ஆர்டர்கள் நடப்பு மாதத்தின் 10ம் தேதிக்குள் வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி, டிசம்பர் மாதத்திற்குத் தேவையான எண்ணெய் விநியோகத்திற்கான ஆர்டர்களை இந்திய அரசு மற்றும் நாட்டின் எண்ணெய் நிறுவனங்கள் இதற்குமேல் வழங்கியிருக்க வேண்டியது வழக்கம்.
ஆனால், இந்த முறை ஆர்டர் வழங்கும் செயல்பாட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து நிறுவனங்கள் ரஷ்யாவை முற்றிலுமாக தவிர்த்துள்ளன. இந்த ஐந்து நிறுவனங்களும் ரஷ்யாவிடம் எந்தவிதமான ஆர்டர்களையும் இதுவரை அளிக்கவில்லை.
முன்பு…
2022 ஆம் ஆண்டு ரஷ்யா–உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, பல உலக நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார அழுத்தம் கொடுக்க வரிகள் விதிக்கத் தொடங்கின. சில நாடுகள் ரஷ்யாவில் இருந்து வரும் இறக்குமதி பொருட்களுக்கு தடைகளையும் அமல்படுத்தின.
இதன் விளைவாக ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த இழப்பை சமன் செய்யும் நோக்கில், ரஷ்யா தங்களது ஏற்றுமதி பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்யத் தொடங்கியது.
இந்த சலுகையை இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் பயன்படுத்தி, ரஷ்யாவிலிருந்து அதிக அளவு எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கின.
உலகில் அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். நமது எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்வதில் பெருமளவில் பிற நாடுகளை நம்பியே இருக்கிறோம்.
இதனால் இந்தியா, ரஷ்யா வழங்கிய அந்த சலுகையை உடனடியாகப் பயன்படுத்தத் தொடங்கியது.