சென்னை,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் ஓ. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தனிக்கட்சி தொடங்குவதாக பரவிய தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
“நான் தனிக்கட்சி தொடங்குவேன் என்று எந்த நேரத்திலும் ஒருபோதும் கூறவில்லை. இதுபோன்ற கேள்விகளை நான் ஏற்கமாட்டேன். தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த செங்கோட்டையனுடன் நான் தொடர்பில் இல்லை. அவர் என்னிடம் பேசவில்லை, நான் அவரிடம் பேசவில்லை.”

இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.