திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. சர்வதரிசன டோக்கன் பெற்றுக் கொண்டு தரிசனத்திற்கு வருபவர்களுக்கு காத்திருக்கும் நேரம் கணிசமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், டோக்கன் இல்லாமல் வரும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் தரிசன நேரமும் பல மணி நேரங்கள் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.

இதனைத் தவிர்க்க, முன்கூட்டியே சர்வதரிசன டோக்கன் பெற்றுக் கொண்டு வருமாறு பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தரிசன வசதி வழங்கப்படுவதால், காத்திருப்பு நேரம் குறைவதாக கூறப்படுகிறது.

மேலும், கோடை விடுமுறை மற்றும் சிறப்பு நாட்களை முன்னிட்டு திருமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.