சென்னை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
*“மதுரை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது. மதுரை–சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நாளை நான் திறந்து வைக்கிறேன்.
இந்த முக்கியமான மேம்பாலத்திற்கு, இம்மண்ணின் மக்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரத்துடன் போராடிய வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டியதில் பெருமை அடைகிறோம்.
சீற்றமிகு சிவகங்கை அரசியின் புகழை இந்த மேம்பாலம் ஒவ்வொரு நாளும் நினைவூட்டிக் கொண்டிருக்கும்.”*