விஜய்யின் இந்த உணர்ச்சி மிகுந்த உரை, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சென்னை:

தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற Tamilaga Vettri Kazhagam செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர் Vijay உணர்ச்சிபூர்வமாக உரையாற்றினார்.

அப்போது அவர், “இது சாதாரண தேர்தல் அல்ல… மாற்றத்திற்கான தேர்தல். மக்களை கண்டுகொள்ளாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. வரும் தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “மாற்றி மாற்றி வாக்களிப்பது மாற்றமல்ல. புதிதாக ஒருவரை கொண்டு வருவதுதான் உண்மையான மாற்றம். இந்த தேர்தலில் இரண்டு முனைப் போட்டிதான் உள்ளது. ஒன்று தவெக, மற்றொன்று திமுக” என்று கூறினார்.

வாக்காளர்களை நோக்கி பேசிய விஜய், “ஏப்ரல் 23 அன்று காலையிலேயே எழுந்து, குடும்பம் குடும்பமாக வந்து விசில் சின்னத்தில் வாக்களியுங்கள். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். உங்களுக்கான தேர்தல்” என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை குறிப்பிட்டு, “உங்க வீட்டிலிருக்கும் அம்மா, அப்பா, அண்ணா, அக்கா எல்லாரையும் விசில் சின்னத்துக்கு ஓட்டு போட சொல்லுங்கள்” என்றும் கூறினார்.

இறுதியாக, கையெடுத்து கும்பிட்டு பேசிய அவர், “தயவு செஞ்சு… உங்க விஜய்க்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க. தமிழ்நாடு ஜெயிக்கணும்” என்று கேட்டுக்கொண்டார்.

விஜய்யின் இந்த உணர்ச்சி மிகுந்த உரை, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.