கேரளா–கர்நாடக எல்லைப் பகுதியில் நடந்த வாகன சோதனையில், காரின் ஓட்டுநர் இருக்கையின் கீழ் ரகசியமாக உருவாக்கப்பட்டிருந்த அறையில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ₹1.44 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

வயநாடு மாவட்டத்தின் தோல்பெட்டி சோதனைச்சாவடியில், திருநெல்லி போலீசார் மற்றும் District Anti-Narcotics Special Action Force (DANSAF) குழுவினர் இணைந்து வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கர்நாடகாவிலிருந்து வந்த காரில் பயணித்தவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் வாகனம் விரிவாக சோதனை செய்யப்பட்டது.

சோதனையில் driver seat-க்கு கீழே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட secret compartment கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள் பணக்கட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. மொத்தமாக ₹1,44,50,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் கோழிக்கோடு வடகராவைச் சேர்ந்த பிரபு ராஜ் (20), கண்ணூர் பானூரைச் சேர்ந்த ஸ்வப்னில் (23) மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராகுல் (26) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Onmanorama உள்ளிட்ட கேரள ஊடகங்கள் இதை சந்தேகிக்கப்படும் hawala money என குறிப்பிட்டுள்ளன. ஆனால் பணம் யாருடையது, எங்கிருந்து வந்தது, யாரிடம் கொண்டு செல்லப்பட்டது மற்றும் பெரிய hawala network-க்கு தொடர்பு உள்ளதா என்பதைக் குறித்து போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.