
BRICS உச்சி மாநாட்டை முன்னிட்டு இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை, அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி சந்தித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பு, இந்தியா–தென்னாப்பிரிக்கா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலான தென்னாப்பிரிக்க அரசின் business engagements-ன் ஒரு பகுதியாக நடைபெற்றதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
18-வது BRICS உச்சி மாநாட்டின் ஓரமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக வாய்ப்புகள், முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் எதிர்கால தொழில் ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பான அம்சங்கள் முக்கியமாக இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக BRICS நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை அதிகரித்தல், தொழில்மயமாக்கலை ஊக்குவித்தல் மற்றும் ஆப்பிரிக்க உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முதலீடுகளை ஈர்த்தல் ஆகியவை தென்னாப்பிரிக்காவின் முக்கிய பொருளாதார இலக்குகளாக உள்ளன.
இந்த சந்திப்பு குறித்து தென்னாப்பிரிக்க அதிபர் அலுவலகம் வெளியிட்ட தகவலில், BRICS மாநாட்டின் ஓரமாக Adani Group Chairman Gautam Adani உடன் அதிபர் Cyril Ramaphosa ஆலோசனை மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையே commercial மற்றும் investment ties-ஐ ஆழப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு அமைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா தற்போது African Continental Free Trade Area திட்டத்துடன் இணைந்து உள்கட்டமைப்பு, தொழில்துறை வளர்ச்சி மற்றும் value-added manufacturing துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க முயன்று வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய infrastructure conglomerates-ல் ஒன்றான Adani Group தலைவருடன் நடைபெற்ற சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இருப்பினும் இந்த சந்திப்பில் குறிப்பிட்ட புதிய முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவோ, திட்ட மதிப்பு அறிவிக்கப்பட்டதாகவோ தற்போதைக்கு உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லை.
BRICS மாநாட்டிற்காக உலக நாடுகளின் தலைவர்கள் புதுடெல்லியில் திரண்டுள்ள நிலையில், அரசியல் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுடன் பெரிய தொழில்துறை நிறுவனங்களுடனான business meetings-களும் கவனம் பெற்று வருகின்றன. தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா–கவுதம் அதானி சந்திப்பும் அந்த வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.