
₹2,000க்கு மேற்பட்ட சில UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% Merchant Discount Rate (MDR) விதிக்கும் புதிய கட்டண அமைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டணத்தை சாதாரண UPI வாடிக்கையாளர் செலுத்த வேண்டியதில்லை. இது Person-to-Merchant (P2M) பரிவர்த்தனைகளில் குறிப்பிட்ட வணிகர்களிடமிருந்து வசூலிக்கப்படும் merchant-side charge என்று மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. புதிய விதிமுறை அக்டோபர் 15, 2026 முதல் அமலுக்கு வருகிறது.
ஒருவர் தனது நண்பர், குடும்பத்தினர் அல்லது மற்றொரு தனிநபருக்கு UPI மூலம் ₹5,000, ₹10,000 அல்லது அதற்கு அதிகமாக பணம் அனுப்பினாலும் Person-to-Person (P2P) transaction முழுமையாக இலவசமாகவே தொடரும். தொகைக்கு எந்த உச்சவரம்பும் வைத்து MDR விதிக்கப்படவில்லை. அதேபோல் வணிகர்களுக்கு செய்யப்படும் ₹2,000 வரையிலான UPI payments-க்கும் புதிய MDR கிடையாது.
₹2,000க்கு மேற்பட்ட தகுதியான merchant transaction-களுக்கு 0.4% MDR பொருந்தும். உதாரணமாக ₹10,000 மதிப்பிலான சாதாரண merchant UPI payment-க்கு கணக்கில் ₹40 MDR வரும். ஆனால் ₹75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளில் அதிகபட்ச MDR ₹300 என்று cap செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் customer-ன் bank account-லிருந்து தனியாக debit செய்யப்படாது; payment ecosystem-ல் merchant-side MDR ஆக செயல்படும்.
ரயில்வே டிக்கெட், தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் மற்றும் விவசாய input போன்ற essential மற்றும் குறைந்த margin கொண்ட துறைகளுக்கு 0.4% charge-க்கு பதிலாக, ₹2,000க்கு மேற்பட்ட transaction ஒன்றுக்கு flat ₹5 MDR நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Mutual funds, securities, stockbrokers மற்றும் dealers தொடர்பான capital-market payments-க்கு 0.02% MDR, அதிகபட்சம் ₹300 என்ற தனி கட்டண அமைப்பு இருக்கும்.
சிறிய வணிகர்களை பாதிக்காமல் இருக்க zero-MDR framework-ல் உள்ள small merchants-க்கு சலுகை தொடரும் என்றும், இதனால் மொத்த merchant UPI பரிவர்த்தனைகளில் சுமார் 96% transactions புதிய MDR-னால் பாதிக்கப்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய கட்டணம் UPI infrastructure, cybersecurity, payment service providers மற்றும் banks ஆகியவற்றின் செயல்பாடுகளை நீண்டகாலத்தில் ஆதரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கப்பட்டுள்ளது.
இதனால் “₹2,000க்கு மேல் UPI அனுப்பினால் எல்லா customers-க்கும் 0.4% charge” என்பது தவறான புரிதல். நண்பருக்கு பணம் அனுப்புவது, குடும்பத்தினருக்கு transfer செய்வது போன்ற P2P transactions இலவசமே. குறிப்பிட்ட merchant payments-ல் மட்டுமே MDR வரும்; அதையும் merchant ecosystem தான் ஏற்க வேண்டும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.