சென்னை:

ஹிந்து மக்களின் உணர்வுகள் மற்றும் வழிபாட்டு உரிமையில் தலையிடுவதை திமுக அரசு நிறுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கையில் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக அரசு தாக்கிய மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக் கிளை தள்ளுபடி செய்து நீதியை நிலைநாட்டியுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

நீதிமன்றம் குறிப்பிட்டதாவது, திமுக அரசு தன் கடமையைச் செய்ய தவறியது மட்டுமல்ல, உள்நோக்கத்துடனேயே வழக்கை தொடர்ந்துள்ளது. தமிழர்களின் பண்பாட்டு உரிமையை பறிப்பதற்காகவே திமுக அரசு வழக்கு தொடர்ந்தது என இது உறுதி செய்கிறது.

இன்று உயர்நீதிமன்றக் கிளையிடம் பெற்ற சவுக்கடி தீர்ப்புக்குப் பிறகு, திமுக அரசு ஹிந்து மத மக்களின் உணர்வுகள் மற்றும் வழிபாட்டு உரிமையில் வீணாக தலையிடுவதை நிறுத்த வேண்டும். ஆட்சிக் கட்டிலில் இருந்து இறுதி கட்டத் தருணத்தில், ஹிந்து மக்களின் உணர்வுகள் மற்றும் வழிபாட்டு உரிமையை மதித்து செயல்பட வேண்டும்.

நயினார் நாகேந்திரன் இதனை தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.