சென்னை: மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரெளபதி 2’ படத்தில் இருந்து ‘எம்கோனே’ பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலை சின்மயி பாடியிருந்தார். பாடல் வெளியானதும் இணையத்தில் பெரும் விவாதம் எழுந்ததால், சின்மயி மன்னிப்பு கேட்டார்.
இதனைத் தொடர்ந்து, சிலர் சின்மயிக்கு ஆதரவாகவும், சிலர் இயக்குநர் மோகன் ஜிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், பேட்டியொன்றில் இயக்குநர் மோகன் ஜி இதுகுறித்து பேசினார்.
அவர் கூறியதாவது: “இப்போதுதான் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. அதற்குள் படத்தை காலி செய்ய பெரிய கூட்டமே இறங்கி வேலை செய்கிறது. இந்த உண்மையை சின்மயி சொன்னால் நல்லது. நான் சொன்னால் குற்றச்சாட்டு ஆகிவிடும். வலதுசாரி சித்தாந்தம் குறித்து படம் எடுத்தால் தாக்குதல் வருவது இயல்பே. அதை சமாளித்தால்தான் மோகன் ஜி மாதிரி நிற்க முடியும்” என்றார்.