சென்னை: தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

*“அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் எளிய மக்களுக்கும் அதிகாரம் வழங்கி, அனைவருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர் நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர். அவரது நினைவுநாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.

அண்ணல் அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம்.”*